லகம் ஒரு நாடகமேடை. மக்கள் அந்த நாடகமேடையில் தோன்றி மறைபவர்கள். கைவழி நயனஞ் செல்ல, கண்வழி மனமும் செல்ல, மனம்வழி பாவமும், பாவத்தின்வழி நவரசமும் சேரும் அபிநயமே வாழ்க்கை. நவரச நாயகனாகிய சந்திரனே உவகையில் கூத்தாடும் மனதிற்கும் அழுகைக்கும் காரணமாகிறான் என்பதே ஜோதிடம் கூறும் உண்மை.

Advertisment

கலையிழந்த முகமும், இடுங்கிய கண்களும் பிரசன்னம் பார்க்கவந்தவரின் கவலையைப் படம்பிடித்துக் காட்டியது. தன் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அதற்குப் பரிகாரத்தை அறியவே வந்ததாகவும் தெரிவித்தார். சேரநெல்லூர் பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

சோழி லக்னம் கடகமாகி, சந்திரன் ராகுவுடன் கூடி எட்டில் அமைந்தது. தைரிய ஸ்தானாதிபதி நீசத்திலிருந்தது. தைரியகாரகனாகிய செவ்வாயும் அஸ்தங்க தோஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. இனம்புரியாத அச்சத்தினால் ஏற்பட்ட மனநோய் என்பது உறுதியானது.

சந்திரனால் உண்டாகும் தோஷம் தீர்ந்தால் மனநோய் தீருமென்பதே பிரசன்னத்தின் வாக்கு. திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோவிலுக்குச் சென்று ஆடி மாத அமாவாசையில் வழிபட்டால் மனநோய் தீருமென்னும் பரிகாரம் சொல்லப்பட்டது. தீராத நோய்களைத் தீர்க்கும் இறைவி அருமருந்தம்மையின் அருளால் பிணிதீர்ந்து சுகம் பெற்றார்.

Advertisment

kjj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜாதக தோஷங்களுக்குப் பரிகாரம் செய்யும்போது நல்லநாள் மற்றும் பொருத்தமான ஹோரை பார்ப்பதுபோல், முக்குண வேளையையும் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒருநாளில் சாத்விகம், ராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களும் மாறிமாறி வரும். ஒரு வேளை மூன்றே முக்கால் நாழிகை, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகள் சாத்விக நாட்களாகும். அந்த திங்கள் மற்றும் வியாழனன்று முதலில்- அதாவது காலை ஆறு மணிமுதல் ஏழரை மணிவரை சாத்விக வேளை. பிறகு ராஜச வேளை, அதன்பிறகு தாமச வேளை வரும். செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் முதலில் ராஜச வேளை வரும். ஞாயிறு, புதன், சனி ஆகிய முன்று நாட்களும் தாமச வேளை முதலாவதாக வரும்.

முக்குண வேளையை அறிந்து பணியாற்றினால் வெற்றி பெறலாமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

திடீர் தனயோகம் உண்டாகுமா?

கேள்வி: என் வாழ்க்கையில், எதிர்பாராத வகையில் பொருளாதாரரீதியான ஏற்றத்தினை அடையமுடியுமா?

-ஜீவரத்தினம், மாங்காடு.

(எண்- 95; சதயம்- 3; நட்சத்திராதிபதி- ராகு; ராசியாதிபதி- சனி.)

* சோழி லக்னமும், பிரசன்ன லக்னமும் கும்பத்தில் அமைவது, திடீர் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

* ஐந்து மற்றும் எட்டாமிடத்து அதிபதியாகிய புதன் ஆட்சி, உச்சம்பெறுவது திடீர் தன யோகத்தைக் காட்டுகிறது.

* இரண்டாமிடத்தில் குருவும் சந்திரனும் இணைவது திடீர் தனயோகத்தை உறுதிசெய்கிறது.

* லக்னாதிபதியாகிய சனிபகவான் பன்னிரண்டில் இருப்பதால் வெற்றியில் தாமதம் உண்டாகும்.

* திடீர் அதிஷ்டத்தைத் தரும் எட்டாமிடத்தில் குருபகவான் பார்வை பதிவதும் கூடுதல் யோகத்தைத் தரும்.

* எதிர்பாராத யோகத்தைத் தரும் ராகுவின் நட்சத்திரத் தில் லக்னம் வர்க்கோத்தமமாக அமைவது அதிர்ஷ்டத்தை வருமுன் உரைக்கிறது.

* பொன்னவனாகிய குருபகவான், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மண்ணெல்லாம் பொன்னாகும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி- குபேரபூஜை செய்தால் திடீர் தனலாபம் கை கூடும்.

(தொடரும்)

செல்: 63819 58636